வாஸ் கூஞ்ஞ) 11.04.2025
இன்றைய அரசின் நோக்கம் மக்களின் வரிகளை கொண்டு அரசியல்வாதிகள் சுகபோகம் அடையாது மக்களின் வரிப்பணம் மக்களின் வாழ்வாதாரத்துக்கு பயன்பட வேண்டும். இதனால்தான் அன்றைய அரசுகள் செய்ததைப் போன்று வீண் செலவு செய்யாது நான் பிரதி அமைச்சராக இருந்தும் அரசியல் நோக்காகக் கொண்டு கொழும்பிலிருந்து மன்னாருக்கு பஸ்சிலேயே பயணித்து வந்தேன் என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னாரில் மக்கள் சந்திப்பை முன்னெடுக்கும் நோக்குடன் பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வியாழக்கிழமை (10.04) மன்னாருக்கு வருகை தந்து மன்னார் தீவிலுள்ள தலைமன்னார் . தலைமன்னர் பயிர் கிழக்கு . நடுக்குடா . துள்ளுக்குடியிருப்பு . முருகன் கோவில் , பேசாலை நகர் , சிறுத்தோப்பு . சின்னக்கரிசல் , கொன்ணையன் குடியிருப்பு , எழுத்தூர் . தரவன் கோட்டை மற்றும் பள்ளிமுனை ஆகிய பகுதிகளுக்குச் சென்று மக்கள் சந்திப்பை மேற்கொண்டார்.
இதன்போது பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மக்கள் மத்தியில் உரையாற்றும்போது
கடந்த ஆண்டு 2024 ல் ஒரு பாரிய மாற்றம் எற்பட்டுள்ளது என்பது எமக்குத் தெரியும்.
இந்த அரசியல் மாற்றத்துடன் ஒரு அரசியல் கலாச்சாரத்திலும் மாற்றம் எற்பட்டுள்ளது.
இந்த நாட்டிலுள்ள பொது மக்கள் வருடந்தோறும் வரிகளையும் செலுத்தி வருகின்றனர்.
இந்த பொது மக்களின் வரிகளை கடந்தகால அரசை ஆண்ட அரசியல் தலைவர்கள் தங்கள் சுகபோகங்களுக்காகவே பெருந் தொகை பணத்தை செலவழித்துள்ளனர்.
ஒரு அமைச்சர் ஒரு இடத்திற்கு செல்லுகின்றார் என்றால் அவருடன் பெருந் தொகை பாதுகாப்பும் வாகனங்களும் பின் தொடரும்.
ஆனால் இந்த கலாச்சாரம் இன்று மாற்றம் அடைந்துள்ளது.
நான் இன்று மன்னாருக்கு வந்திருக்கின்றேன் என்றால் இன்று எனது அமைச்சின் வாகனத்தை பாவிக்கவில்லை. மாறாக பிரதி அமைச்சராக இருந்தும் கொழும்பிலிருந்து மன்னாருக்கு பஸ்சிலேயே வந்து இங்குள்ள ஒரு தனியார் வாகனத்தில் பயணித்து வருகின்றேன்.
இதற்கு காரணம் பொது மக்களின் பணத்தை எங்கள் சுகபோகத்திற்காக செலவழிக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் இதை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். இதுதான் எங்கள் கட்சி.
எங்களுக்க அதிகாரம் கிடையாது மக்களின் பணத்தை எங்கள் விருப்பப்படி செலவு செய்ய.
எங்கள் ஜனாதிபதி அனுரா தெரிவித்திருக்கின்றார். மக்களின் பணம் தெய்வத்திற்கு போன்றது என்று.
சிலர் சொல்லுகின்றார்கள் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து என்ன மாற்றத்தைக் கண்டுள்ளார்கள் என்று. நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாற்றங்களில் இதுவும் ஒன்று.
எங்கள் ஜனாதிபதி எங்குச் சென்றாலும் முன்னைய ஜனாதிபதிகள் போன்று ஆடம்பரமாக செயல்படவில்லை. எளிமையான முறையிலேயே செயல்படுகின்றார்.
இவ்வாறான மாற்றத்திற்காகத்தான் மக்கள் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வாக்களித்தார்கள்.
இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து ஆட்சிபுரிந்தவர்கள் பெரும் பெரும் புள்ளிகளே. ஒரு ஏழை மகன் ஆட்சிபரிய அவர்கள் இடம் கொடுக்கவில்லை. ஒன்று நீலம் அல்லது பச்சை கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
ஆனால் இன்று இது மாற்றம் அடைந்துள்ளது. ஒரு சாதாரண விவசாயின் மகனை இன்று மக்கள் ஆட்சிப்பீடம் ஏற்றியுள்ளனர்.
மக்கள் கொடுத்த ஆணைக்கு கலங்கம் ஏற்படாவண்ணம் ஜனாதிபதி தற்பொழுது தனது ஆட்சியை முன்னெடுத்துச் செல்லுகின்றார்.
இன்று மத வாதம் இனப் பிரச்கனை தோன்றா வண்ணம் முடிவுகட்டப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்துக்கு இம்முறை வரவு செலவு திட்டத்தில் அபிவிருத்திக்காக அதிக பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் சொகுசா இருப்தற்கு வாகன இறக்குமதி செய்ய சலுகை இருந்தது. ஆனால் மன்னார் மாவட்டத்தில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு போவதற்கு தகுந்த போக்குவரத்து இல்லை.
இன்று இந்த சலுகைகள் நிறுத்தப்பட்டு மக்கள் நலன் நோக்கிய செயல்பாட்டை இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது.
கொலைகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் ஊழல் புhரிந்தவர்கள் யாவரும் தண்டனைகளுக்கு உள்ளாகி வருவதை நீங்கள் இப்பொழுது பார்க்கின்றீர்கள்.
எமது நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சிக் கண்டு வருகின்றது. எமது கிராமங்களும் மேலும் வளர்ச்சிக் காண உள்ளுராட்சி மன்றங்களுக்கும் எமது கட்சி தெரிவாக யாவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என இவ்வாறு தெரிவித்தார்.
(வாஸ் கூஞ்ஞ)