மன்னார் மாவட்ட பனம் பொருள் உற்பத்தியாளர்களுக்கான

( வாஸ் கூஞ்ஞ) 11.04.2025

மன்னார் மாவட்ட பனம் பொருள் உற்பத்தியாளர்களின் எதிர்கால சந்தைப்படுத்த நடவடிக்கைகளை முன்னிறுத்திய திட்டமிடலுக்கான ஒன்று கூடல் மாவட்ட யுஎன்டிபி நிறுவன நிதி அனுசரணையோடு உலகளாவிய சுற்றுச் சூழலியல் வசதி திட்டத்தின் கீழ் பனை அபிவிருத்திச் சபையின் மாவட்ட தலைவர் திரு. யு. பெனில்டஸ். பீரிஸ் அவர்களின் ஏற்பாட்டில் ஒன்றுகூடல் சிறந்த முன்னேற்பாடுகளுடன் மன்னாரில் மிக சிறப்பாக நடத்தப்பட்டது.

மன்னாரின் தனியார் விடுதி ஒன்றில் கடந்த செவ்வாய் கிழமை (08.04) மிகச் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் இதன் ஒருங்கிணைப்பாளர் திரு. தி. கணேஸ் அவர்கள்.. பனம் பொருள் உற்பத்தியாளர்கள் இனிவரும் நாட்களில் காலத்திற்கேற்ப தம்மை தகவமைத்துக்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது எனவும்

நீங்கள் உங்களை சார்ந்திருக்கும் உள்ளூர் வளங்கலையும்இ அரசு வளங்களையும்இ அரசுசார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பையும் பெற்று நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதே எமது நோக்கமென தெளிவாக எடுத்துரைத்தார்.

மாவட்ட அரசு சார்பற்ற நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் திரு.ரமேஷ் , ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி. ஜெயவதனி , திரு தி. கணேஷ் மற்றும் முகாமையாளர் கலாநிதி. சம்பா , வளவாளர் ஆகியோர் இந்நிகழ்விலே கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ் ஒன்றுகூடலிலே 12 பதிவு செய்யப்பட்ட பனம்பொருள் உற்பத்திஇ மற்றும் ஏற்றுமதியாளர்கள் கலந்கொண்டு பயன் பெற்றனர்.

இக்கூட்டத்தின் பிரதான நோக்கம் பனம் பொருள் உற்பத்தியாளர்கள் , சந்தைப்படுத்துவோர் , ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்கிடையிலான புரிந்துணர்வுடன் கூடிய பரஸ்பர ஒன்றிணைப்பும் , கூட்டமைப்பாக உருவெடுத்தலுமான செயற்பாட்டை வலுப்படுத்துவதாகும் அமைந்திருந்தது
.
இவ்வாறு அமைக்கப்பட்ட கூட்டமைப்புக்குரிய நிருவாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

தரவன் கோட்டை , ஓலைத்தொடுவாய் , புதுக்குடியிருப்பு , கீளியன் குடியிருப்பு , கட்டுக்காரன் குடியிருப்பு , தலைமன்னார் ஸ்ரேசன் , தலைமன்னார் கிராமம் , படப்படி , உயிலங்குளம் , புதுக்கமம் , முருகன் கோயிலடி , நடுக்குடா , கவையன் குடியிருப்பு , வட்டுப்பித்தான் மற்றும் மடு ஆகிய மன்னார்க்கிராமங்களில் இருந்து இக்கூட்டத்திற்கு வருகை தந்தோரிடையே இருந்து நிருவாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

புனங்களி , கிழங்கு , வெல்லம் , பதநீர் , ஒடியல் , பனாட்டு , பனங்கட்டி இவற்றோடு பனையோலைக் கைவினைக் கலைஞர்களும் கலந்து கொண்ட இப் பெறுமதிமிக்க கூட்டத்தில் இருந்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன..

அக்கருத்துக்களினூடாக எதிர்ப்படும் சகல பிரச்சினைகள் , முரண்கள் பற்றியதான உரையாடல்களை வளவாளர்கள் வழிப்படுத்தியிருந்தார்கள்.

குழுச்செயற்பாடுகளாக பிரச்சினைகளை இனம் காணுதலும் தீர்வினை அணுகுதலும் என்ற பொருளில் இக்குழுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அவ்வாறே குழுக்கள் யாவும் தங்களை சுயபரிசோதனை செய்து தம்மீது காணப்பட்டதான குறைபாடுகளை தெளிவாகப்புரிந்து கொள்ளவும் இங்கு வாய்ப்பு எற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தங்களின் பனை வள முகாமைத்துவம் என்ற பகுதியில் உற்பத்தியில் காணப்படும் கவனமின்மை , மற்றும் குறைபாடுகளை உடனடியாக நீக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொண்டார்கள்.

தொடர்ந்து வளவாளர்களுடைய ஆலோசனையின் படி தமக்கு ஏதுவான சந்தைப்படுத்தல் என்ற பகுதிக்குள் தம்மை தமது உற்பத்தி பொருட்களை சரியாக அழகாக , சுத்தமாக மேற்கொள்ளும் போது நல்ல சந்தை வாய்ப்பு மற்றும் ஏற்றுமதி தரம் பெறப்படும் என்பதை முழுமையாக ஏற்றுக் கொண்டு அதன்படி செயற்றிட்டத்தை முன்னெடுத்தார்கள்.

பின்பு இவ் ஒன்றுகூடல் பனம்பொருள் உற்பத்தியாளர்களுக்காக நடத்தப்பட்ட விசேட கருத்தாடல் கூட்டம் பிரயோசனத்தை வழங்கியதாகவும் இதுபோன்ற கருத்தமர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமெனவும் பயனாளிகளால் விடுக்கப்பட்டது

(வாஸ் கூஞ்ஞ)