(எருவில் துசி) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட ஓந்தாச்சிமடம் கிராமத்தின் பிரதான வீதியில் உள்ள சந்தைக்கு முன்பாக காணப்பட்ட வேம்பு மரமானது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்டது. குறித்த மரத்தினை வெட்டி வீழ்த்துகின்ற செயற்பாட்டினை செயலாளர் சு.சுபறாஜன் அவருடைய நடவடிக்கையின் கீழ் இன்றைய(22) தினம் குறித்த வேம்பு மரம் வெட்டி வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.