பிரதேச சபையினால் களுதாவளையில் நடமாடும் சேவை.

(எருவில் துசி) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட களுதாவளை மக்களின் நலன் கருதி ஆதன வரி மற்றும் வியாபார வரி செலுத்துவதற்கான நடமாடும் சேவையானது களுதாளையில் உள்ள இந்து இளைஞர் மண்டப கட்டடத்தினுள் இன்று(22) சபையில் செயலாளர் சு. சுபறாஜன் அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது.

குறித்த நடமாடும் சேவையில் அதிகளவான மக்கள் தங்களுடைய வியாபார மற்றும் சோலை வரி கட்டணங்களை ஆர்வத்துடன் செலுத்திய மையினை அவதானிக்க முடிந்தது.

இவ்வாறான நடமாடும் சேவைகள் பிரதேசத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் எதிர்வரும் காலங்களில் நடாத்தப்படும் என செயலாளர் குறிப்பிட்டார். இதில் சபையில் கடமையாற்றுகின்ற உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் தங்களுடைய பங்களிப்பினை சிறப்பாக வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.