கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் – 2025

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டமானது இன்று (13.02.2025) 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி. ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் வரவேற்புரையுடன் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி. பிரபு தலைமையில் ஆரம்பமாகியது. இக்கூட்டத்திற்கு மட்டக்களப்பு பாரளுமன்ற உறுப்பினர்களான இ.சிறிநாத் ஞா.ஸ்ரீநேசன் எம்.எஸ் நலீம் மற்றும் ஜி.திலிப்குமார் இணைப்பாளர் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன்இ பிரதேச செயலக கணக்காளர் திருமதி.தயானி சசிகுமார் மற்றும் ஏனைய திணைக்களத் தலைவர்கள்இ சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்இ ஊடகவியலாளர்கள்இ அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பிரதேச செயலக பிரிவில் தற்போது நடைபெறுகின்ற அபிவிருத்தி செயற்பாட்டுத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் எதிர்கால அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான முன்னேற்பாடுகளும் பரிந்துரைக்கப்பட்டன. மேலும் பிரதேச மட்டத்திலான திணைக்களங்களின் தற்போதைய பிரச்சினைகளும் இனங்காணப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்மொழியப்பட்டன.