தம்பலகாம பிரதேசத்தில் இன நல்லிணக்க குழுவை உருவாக்கல்

சமூக நல்லிணக்கத்துக்கு வழிகோலும் நிகழ்வொன்று (11) தம்பலகாமம் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த செயற்த்திட்டமானது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் பிரிட்டிஷ் கவுன்சிலின் தலைமையில் சேர்ச் போர் கொமன்ட் (SFCG) ஆல் நாடளாவிய ரீதியில் SEDR திட்டமானது செயற்படுத்தப்படுகின்றது SFCG திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்கானது, இலங்கையில் இலக்கு வைக்கப்பட்ட ஆறு மாவட்டங்கள் மற்றும் பன்னிரண்டு பிரதேச செயலக பிரிவுகளில் முரண்பாடுகளை சாதகமான முறையில் நிலைமாற்றம் செய்யவும் மற்றும் வன்முறை அதிகரிப்பதைத் தடுக்கவும் உள்ளூர் மட்ட மாற்றுவழி பிணக்கு தீர்வு வழிமுறைகளை (ADR மன்றங்களை) வலுப்படுத்துதல்.

இதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் SFCG இணைந்து விழுது ஆற்றல் மேம்பாடு மையம் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது இதன் தொடர்ச்சியாக தம்பலகாம பிரதேசம் பல் கலாசார பிரதேசதமாக காணப்படுவதால் தொடர்ச்சியாக இன நல்லிணக்கமின்மை செயற்பாடுகளுகள் அதிகரித்து வருவதால் இண நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டில் தம்பலகாமாம் ADR குழு செயற்பட்டு வருகிறது அந்த வகையில் 2025/02/11 திகதி மாற்றுவழி பிணக்கு தீர்வு குழுவினரின் ஏற்பாட்டில் அன்றைய தினம் தம்பலகாம பிரதேசத்தில் அமைந்துள்ள நான்கு சமய தலங்களின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் சமய தலைவர்கள் உள்ளடக்கி தம்பலகாம நல்லிணக்க குழுவை உருவாக்குவதை அடிப்படையாக கொண்டு இந்த சமூக மட்ட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் போது இதில் கலந்து கொணடவர்களால் தம்பலகாம பிரதேசத்தின் இன நல்லிணக்கம் தொடர்பான பலம் ,பலவீனங்கள் ,சவால்கள்,வாய்ப்புக்கள் தொடர்பாக ஒவ்வொரு குழக்களின் கலந்துரையாடல் இடம்பெற்றது இதன் போது இதில் காணப்பட்ட நல்லிணக்கத்துக்கு தடையாக உள்ள சவால்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றுக்கு எவ்வாறான நடவடிக்கைகள் ஊடாக தீர்வை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு இதற்க்காக நல்லிணக்க குழுவும் உறுவாக்கப்பட்டது.

இதன் ஊடாக தம்பலகாம பிரதேசத்தின் நல்லிணக்கத்துக்கு தடையாக உள்ள காரணங்கள் அடையாளம் காணப்பட்டு சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் சமூக மட்ட கலந்துரையாடல்கள் ஏற்படுத்தி சிறந்த நல்லிணக்க சமூகத்தை உருவாக்குதல் இதன் முக்கிய பங்காக காணப்படும் இந்த நிகழ்வில் விழுது நிறுவனத்தின் ADR திட்ட உத்தியோகத்தர் டி. எம் .கிசாம் மற்றும் ADR மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர் போன்றவர்கள் இதில் கலந்து சிறப்பித்தனர்.