ரிதத்தின் 20வது ஆண்டு நிறைவு… மரநடுகையுடன் சிறப்பு நிகழ்வுகள்…

ரிதத்தின் 20வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் கடந்த 2025.02.06ம் திகதியுடன் ரிதமானது தனது 20வது அகவையைப் பூர்த்தி செய்துள்ளது. அதனை சிறப்பிக்கும் வகையில் பிறந்த தின கேக் வெட்டுகையுடன், தேநீர் விருந்துபசாரம் மற்றும் மரநடுகை நிகழ்வு என்பன ரிதம் இளைஞர் கழகத் தலைவர் சா.சஜிந் தலைமையிலும், கழக செயலாளர் செல்வி டி.டினுசிக்கா வின் ஒழுங்கமைப்பிலும் ரிதம் சனசமூக நிலைய கட்டிடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ரிதம் சனசமூக நிலையத்தின் தலைவர் வைத்திய கலாநிதி பேராசிரியர் கே.ஈ.கருணாகரன், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் அ.கிருரஜன், புளியந்தீவு தெற்கு கிராம சேவை உத்தியோகத்தர் ச.சதீஸ்வரன் உட்பட சனசமூக நிலையத்தின் நிருவாகிகள், ரிதம் இளைஞர் கழகத்தின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது 20வது ஆண்டு பூர்த்திக்கான கேக் கழக உறுப்பினர்களால் வெட்டப்பட்டதுடன், 20வது ஆண்டு பூர்த்தியின் ஞாபகார்த்தமாக கழக உறுப்பினர்களால் அதிதிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டு சனசமூக நிலைய வளாகத்தில் மரக்கன்று நடுகையும் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.