உழவர் திருநாளாகிய தமிழர்களின் பொங்கல் விழா இன்று (5) பல்வேறு கலை நிகழ்வுகளுடன் இடம்பெற்றது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பொங்கல் விழா பிரதேச செயலாளர் சி.சுதாகர் தலைமையில் இடம்பெற்றது. கடுக்காமுனை நெக்கட்டியடி ஸ்ரீ விக்கினேஸ்வரர் முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் கிராமமட்ட பொது அமைப்புக்களின் ஒத்துழைப்புக்களுடன் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள், கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கூத்து, வசந்தன், வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்வுகள் இடம்பெற்ற அதே வேளை, அருவி வெட்டி புதிய அரிசி பெற்று பண்பாட்டியலோடு கூடிய நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.