அனுர அரசு நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தியது.
77 ஆவது சுதந்திர தின விழா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. இதன் போது முப்படை அணிவகுப்போடு கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதன் போது அனுர அரசின் தேசிய நல்லிணக்கத்தினை வெளிப்படுத்தும் வண்ணம் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்பட்டது. இது நாட்டின் இன நல்லிணக்கத்தை வலுவூட்டுவதற்கான அம்சம். நிச்சயமாக இது சம்பந்தமாக ஜனாதிபதி அனுர கூமார திசாநாயக்க அவர்களையும் அவரது அரசும் பாராட்டுக்குரியவர்கள் என்று சர்வதேச இந்து மத பீடம் சார்பாக கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியின் நிறைவில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் பாபு சர்மா உரையாடிய போது நேரடியாகவே தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது தொடர்பில் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.