இலங்கையின் 77வது சுதந்திர தின விழா சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் விமரிசையாக கொண்டாடப்பட்டது

சர்ஜுன் லாபீர்)

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின்
77வது சுதந்திர தின விழா சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் இன்று(4) பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் சம்மாந்துறை சுற்றாடல் கழக மாணவர்களினால் மர நடுகை நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும் எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்காளுக்காக 2 நிமிட மெளன பிராத்தனையும் இடம்பெற்றது.

இன்றைய சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு காணி உறுதிப் பாத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந் நிகழ்வுக்கு உதவி கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா,நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமில்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம் ஹுசைன்,மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.கே.ரினோஸா உட்பட மாணவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.