அ . அச்சுதன்
மலேசிய எமுத்தாளரான பெருமாள் இராஜேந்திரனின் ” மலேசிய இலங்கை இலக்கியம் ஓர் அறிமுகம் ” நூல் வெளியீட்டு நிகழ்வும் திருகோணமலை எமுந்தாளர் சந்திப்பும் திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் எமுத்தாளர் நீலையூர் சுதா தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு இடம் பெற்றது.
மலேசியாவின் முன்னாள் தமிழ்ச் சங்கத்தலைவரும், எமுத்தாளரும் சிறந்த பேச்சாளருமான பெருமாள் இராஜேந்திரன் திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் பிரமகுரு , வேதாகமாமணி பிரம்ம ஸ்ரீ சோ. இரவிச்சந்திரக்குருக்கள் அவர்களுக்கு நூலின் முதல் பிரதியை வழங்கி வெளியீட்டு வைத்தார்.
திருகோணமலை எமுத்தாளர்களுக்கு நூல் பிரதிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்தின் பரிபாலனசபை தலைவர் திலகரெட்ணம் துஷ்யந்தன் சிறப்புரை வழங்கினார்.
மலேசியாவில் இருந்து 36 எமுத்தாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
எமுத்தாளர் சார்பில் நீலையூர் சுதா பெருமாள் இராஜேந்திரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.