( வி.ரி. சகாதேவராஜா)
மண்முனை தென் எருவில்பற்று( களுவாஞ்சிக்குடி ) பிரதேச செயலாளராக கடந்த 7 வருடங்களாக உன்னதமான பொதுச் சேவை புரிந்த பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னத்திற்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
பிரதேச செயலக நலன்புரிச்சங்கத்தின் ஒழுங்கமைப்பில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரனின் தலைமையில்,பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
சேவை நலன் பாராட்டு விழா மற்றும் பிரியாவிடை நிகழ்வில் பலரும் பிரதேச செயலாளரின் அர்ப்பணிப்பான சேவைகள் பற்றி உரையாற்றினார்கள்.
நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக இடமாற்றம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.