டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் களப்பணி !

நூருல் ஹுதா உமர்

டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தி பிரதேச மக்களை ஆபத்திலிருந்து மீட்க கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி சகிலா இஸ்ஸதீனின் வழிகாட்டலுக்கு அமைய காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வசீர் அவர்களின் தலைமையில் கொள்கலன் சேகரிப்பு நிகழ்வு காரைதீவு மாவடிப்பள்ளி பிரதேசத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், நுளம்பு கள தடுப்பு பிரிவினர்கள், சுற்றாடல் கழக மாணவர்கள், பிரதேச சபை ஊழியர்கள் நுளம்பு பெருகும் இடங்களை பரிசோதனை செய்து நுளம்பு பெருகும் பொருட்களை பிரதேச சபை ஊழியர்களினால் அகற்றப்பட்டது.