மட்டக்களப்பில் வடிசாராய உற்பத்தி நிலையங்கள் சுற்றி வளைப்பு, 5 லட்சத்து 25 ஆயிரம் லீட்டர் வடிசாராயம் கைப்பற்றல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை ஆற்றை அண்டிய பகுதியில் இன்று (28) பெருங்குற்ற தடுப்பு பிரிவு சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு பெருங்குற்ற தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட குறித்த சுற்றி வளைப்பில் சட்டவிரோத வடிசாரய உற்பத்தி நிலையங்கள் பல அழிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியிலிருந்து கோடாவுடன் 24 வறல்களும், வடிசாராயத்துடன் 07 வூளிகள், ஒரு லீட்டர், ஒன்றரை லீட்டர் அளவுடைய போத்தல்களில் அடைக்கப்பட்ட வடிசாராயம், 525000 மில்லி லீட்டர் , மற்றும் வடிசாராய உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், போக்குவரத்திற்கான தோணி உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் மேலதிக நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இச்சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.