மட்/ பட்/ எருவில் கண்ணகி மகா வித்தியாலயம் புலமைப் பரிட்சையில் சாதனை.

(எருவில் துசி)  மட்/ பட்/ எருவில் கண்ணகி மகா வித்தியாலயம் இவ்வாண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் வரலாற்று சாதனை.

பாடசாலையில் 2024 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய தரம் 05 மாணவர்களில் மொத்தமாக 12 மாணவர்கள் வெட்டுப் புள்ளியை அண்மித்திருப்பதுடன் அதில் 7 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இவ்வாறு தரம் 5 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகளவான மாணவர்கள் வெட்டுப் புள்ளியினை அண்மித்திருப்பதும் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்றிருப்பதும் இதுவே எமது பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாகும்.

பாடசாலையில் ஆரம்ப பிரிவு அடைவு மட்டம் தொடர்பாக திருப்தியின்மை கடந்த காலங்களில் நிலவியிருப்பினும் அதற்கு இந்த பரீட்சை பெறுபேறு ஆரம்பப் பிரிவின் முன்னேற்றகரமான மறுமலர்ச்சிக்கு தக்க சான்றாகவும் அமைந்துள்ளது.

பவள விழாவில் பிரதேசம் முழுவதும் பிரபல்யமாக பேசப்பட்ட  பாடசாலை தற்போது புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றிலும் நற்பெயரோடு பேசப்படுவதும் மகிழ்வான தருணம் ஒண்றாகும். இந்த அடைவின் மூலம் அடுத்தடுத்த ஆண்டுகளில் எமது பாடசாலையில் தரம் 1 இற்கு புதிதாக மாணவர்கள் அனுமதி பெறும் எண்ணிக்கையிலும் வளர்ச்சியை காட்டும் என நாம் நம்புகிறோம்.

பாடசாலை ஆரம்ப பிரிவில் ஸ்திரமான நிலை ஒன்றினை உருவாக்குவதற்கு அற்பணிப்புடன் உழைத்த பாடசாலை அதிபர் திரு. S.தீபதர்சன்  பிரதி அதிபர் திரு N.நல்லரெத்தினம் உப அதிபரும் ஆரம்பபிரிவு பகுதித் தலைவருமான திரு K. அருட்சிவம்

அத்துடன் அம் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து வழிகாட்டிய தரம் 5 வகுப்பாசிரியர்களான திரு.ரஜனிகாந்  திருமதி ச.சன்முகராசா  அத்துடன் அம்மாணவர்களை ஆரம்பம் முதல் ஆரம்ப பிரிவில் கற்பித்து வழிநடாத்திய ஆரம்பப் பிரிவின் ஏனைய ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களையும் இந்த நிமிடத்தில் மனதார பாராட்டி வாழ்த்துவதுடன்

அம்மாணவர்களது பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு அயராது உழைத்து பல வழிகளிலும் உதவிகளை வழங்கி வரும் பழைய மாணவர்கள், கல்விச் சமூகம் அனைவரையும் பாராட்டி வாழ்த்துவதுடன் நன்றிகளையும் தெரிவித்துக் கிள்கின்றோம்  என
பழைய மாணவர் சங்கம் கருத்துரைத்தது.