மட்டக்களப்பில் வெள்ள நிவாரணம்

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் இடம்பெற்று வருகின்றது.

தற்போது இடம்பெற்ற  காலநிலை மாற்றத்தால் குளங்கள் வாண்கதவுகள் திறக்கப்பட நிலையில் நீர் கிராமங்களுக்குள் உட்புகுந்ததன் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு இடைத்தங்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர்.
 அந்த வகையில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கு நிகழ்வு  வந்தூறுமூலை விநாயகர் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
இதன்போது வந்தாறுமலை மேற்கு பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அகில இலங்கை இந்து மாமன்றத்தின்  ஒரு இலட்சம் நிதி உதவி மூலம்  குடும்பங்களுக்கு அரிசி, சீனி, பருப்பு, சோயாமீற், உப்பு, கோதுமைமா அடங்கிய உலர் உணவு  பொதிகள் வழங்கப்பட்டது.
 மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரர் தலைமையில் இடம் பெற்ற நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொருளாளர் நா.புவனசுந்தரம், பேரவையின்  உறுப்பினர்கள் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.