கிளீன் சிறிலங்கா (Clean Srilanka) கருத்திட்டம் தொடர்பாக மட்டக்களப்பு மேற்கு பாடசாலையில் கடமையாற்றும் அதிபர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று(22) புதன்கிழமை கன்னகுடாவில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது கருத்திட்டத்தில் உள்ளடங்கும் சுற்றாடல், சமூக மற்றும் ஒழுக்க நெறிமுறை அணுகல் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வலயக்கல்விப் பணிப்பாளர் யோ. ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இது தொடர்பில் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்ட வலய இணைப்பாளர் ரகுவரன் விளக்கமளித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த வலயக்கல்விப் பணிப்பாளர் மன ரீதியான மாற்றத்தின் மூலமே நிலையான செயற்பாடுளை வினைத்திறனாக மாற்ற முடியும் என்றார்.
பாடசாலைகளில் முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் இதன் போது தெளிவுபடுத்தப்பட்டன.