எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய குடும்பத்தினரின் வாழ்வாதார உதவிக்கான நவீன தையல் இயந்திரம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் இன்று (21) வழங்கி வைத்தார்.
2006 ஆம் ஆண்டு இந்தியா சென்று அங்கிருந்து மீண்டும் 2023 ஆம் ஆண்டு நாடு திரும்பி மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் உறவினர் வீடு ஒன்றில் வாழ்ந்து வரும் குடும்பத்தினருக்கு இலங்கை அகதிகள் புணர்வாழ்வு மற்றும் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் (oferr) ஒப்பர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உதவியுடன் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு மற்றும் நவீன தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கை அகதிகள் புணர்வாழ்வு மற்றும் ஒருங்கிணைந்த திட்டத்தின் ஆலோசகரும் ஓய்வு நிலை மாவட்ட அரசாங்க அதிபருமான கே கருணாகரன் ஏற்பாட்டில் தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வில் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம், உதவி பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம் சியாத், இலங்கை அகதிகள் புணர்வாழ்வு மற்றும் ஒருங்கிணைந்த திட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.