கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரின் பதவிக்காலம் இன்றைய தினத்துடன் (21.01.2025) நிறைவடைகின்ற நிலையில் பிரதி உபவேந்தராக கடமையாற்றிய பேராசிரியர் தம்பிராசா பிரபாகரனை பதில் கடமை மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரின் பதவிக்காலம் இன்றைய தினத்துடன் முடிவடைந்தது. அதன்படி நாளைய தினம் (22.01.2025) முதல் பதில்கடமையினை பிரதி உபவேந்தர் மேற்கொள்ளவுள்ளார்.
ஏற்கனவே உபவேந்தராக இருந்த பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம், பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன், பேராசிரியர் பிள்ளையான் பிரதீபன் ஆகியோரது பெயர்கள் பேரவையினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இருப்பினும் ஜனாதிபதியின் தெரிவாக அமையும் உபவேந்தர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் பதில் உபவேந்தரை மறு அறிவித்தல் வரும் வரை கடமைகளை மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.