வீட்டினை ஒப்படைக்க நாம் தயார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கம் எப்போது கோரினாலும் தாம் ஒப்படைக்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், குறித்த உத்தியோகபூர்வ இல்லம் அரசியலமைப்பு ரீதியாக தனக்கு சொந்தமானது எனவும் எழுத்துமூல அறிவித்தல் வழங்கினால் குறித்த இல்லத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க தயார் எனவும் தெரிவித்தார்.