க.ருத்திரன்
இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய பொங்கல் விழா மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (18) கொட்டும் மழையில் சாரணர் சங்க மட்டு கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.அதிதிகள் அனைவரும் மலர் மாலை அணிவித்து சாரணர் சின்னம் பொறிக்கப்பட்ட களுத்துப்பட்டியும் வழங்கி காந்தி பூங்கா வரை சாரணர் மாணவர்களின் கலாச்சார வாத்திய இசையுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
குறித்த பொங்கல் விழா நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளீதரன் கௌரவ அதிதிகளாக இலங்கை சாரணர் சங்க மட்டக்கள்பு தலைவர் வை.ஜெயசந்திரன் விசேட விருந்தினர்களாக
மட்க்களப்பு மாநகர சபை ஆணையானர் என.தனஞ்சயன் உள்ளுராட்சி பிரதி ஆணையாளர் எஸ்.பிரதீபன் மட்டக்களப்பு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ் ரவிராஜ் மற்றும்ENTER WORLD FOUNDATION நிறுவனர் கு.விக்கினராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர.
இவ் பொங்கல் நிகழ்வானது இனங்களிடையே சமூகங்களிடையே மற்றும் மதங்களிடையே ஒரு நல்லிணக்கத்தை தோற்றுவிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தாம ;உரையாற்றும்போது தெரிவித்தார்.
சம்பிராய பூர்வமாக பாரம்பரிய முறையில் பொங்கல் விழா ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வகள் இடம்பெற்றது.மாணவர் மத்தியில் கோலம் போடுவதை ஊக்குவிக்கும் முகமாக கோலப் போட்டி இடம்பெற்றது.அத்துடன் சாரணர் சங்கம் மாவட்டத்தில் வளர்சியடைய ஓத்துழைப்பு வழங்கியவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.