சுகாதார நிலையங்களுக்கு அரச காணி ஆவணங்கள் வழங்கி வைப்பு!

(சர்ஜுன் லாபீர்)

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மல்வத்தை-03 (மஜீட்புரம்) மற்றும் மலையடிக்கிராமங்களில் உள்ள சுகாதார நிலையங்களுக்கு அரச காணி ஆவணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று(17) சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபாவினால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீனிடம் காணி ஆவனங்கள் முறையாக கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில்சம்மாந்துறை பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் டி.கே.எம் ஜவாஹீர்,அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.