ந.குகதர்சன்
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஞாபகார்த்தமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற நூறு குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வாழைச்சேனையிலுள்ள பேரவை காரியாலத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற நூறு குடும்பங்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் பெறுமதிமிக்க உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்திற்காக கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்கள் ரூபாய் 115000 நிதியுதவியினை வழங்கியிருந்தார். மிகுதி நிதி மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையின் ஊடாக வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற உதவி வழங்கும் திட்டத்தில் பேரவை இணைப்பாளர் ந.குகதர்சன் மற்றும் உறுப்பினர்களான சி.தயாபரன், சா.யோகநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.






