கடந்த காலங்களில் பொருளாதார மைய நிலையங்கள் வவுனியாவிலும் மட்டுவிலிலும் பல கோடிக்கணக்கான ரூபாயில் இந்த பொருளாதார மையங்கள் அமைக்கப்பட்டன அண்மையில் பிரபல தொலைக்காட்சி ஊடகம் இந்த பொருளாதார மையங்கள் இயங்காமல் இருப்பதையும் மக்களின் வரிப்பணம் வீணாடிக்கப்பட்டத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக வன்னி பிரதேசத்தின் விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்தவும் அதன்மூலம் அந்த விவசாயிகளுக்கு ஆகபூர்வமான பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தவும் இந்த பொருளாதார மையங்கள் உதவுகின்றன.
ஜனாதிபதி அனுர குமார திசைநாயக்க இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளுக்கு நிச்சயமாக உரிய ஆக்கபூர்வமான நல்ல நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மிகவும் ஆர்வமாக செயற்படுகின்றார். இந்த வகையில் வட மாகாண ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகம் அவர்கள் இது சம்மந்தமாக ஜனாதிபதிக்கு தெரிவித்து. இயங்காமல் இருக்கும் இந்த பொருளாதார மையங்களை இயங்குவதற்கும் விவசாய சந்தை பொருட்களை சந்தைப்படுத்தவும் உற்பத்தியாளர்களுக்கு பொருளாதார வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கவும் வீணாடிக்கப்பட்ட மக்கள் வரிப்பணத்திற்கு இவை மீண்டும் இயங்க செய்வதற்கு அதிக பொறுப்புணர்வுடன் இப்போது இருக்கும் ஆளுனர் உரிய நடவடிக்கையை மேற்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் சர்வதேச இந்துமத பீடம் சார்பாக அதன் செயலாளர் சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.