புதுவருட அன்பளிப்பும் அமைச்சின் ரீ சேட் அங்கியும் வழங்கி வைப்பு!

புதுவருடத்தையொட்டி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைச்சின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு புதுவருட அன்பளிப்புடன் அமைச்சின் சின்னம் பொறிக்கப்பட்ட ரீ சேட் வழங்கி வைக்கும் நிகழ்வு அன்மையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எல்.பி.மதநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கரன், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல், கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்கள மாகாண ஆணையாளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட அமைச்சின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சுகாதார அமைச்சின் செயலாளர் எல்.பி.மதநாயக்கவினால் புதுவருட அன்பளிப்பும் அமைச்சின் சின்னம் பொறிக்கப்பட்ட ரீ சேட்டையும் வழங்கி வைத்தார்.