இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை செயற்திட்டம் பற்றிய கருத்தரங்கு

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் நடைபெற்று வருகிகின்றது.

அதில் ஒரு அங்கமாக சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை சம்மந்தமாக கிராம சேவகர்களுக்கு தெளிவுபடுத்தும் கருத்தரங்கு இன்று(06) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.எம்.ரசாத் வளவாளராக கலந்து கொண்டு புதிய இலத்திரனியல் அடையாள அட்டை சம்மந்தமாக தெளிவுபடுத்தினார்.என்பதோடு இந் நிகழ்வில் நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம் நளிரும் கலந்து கொண்டார்.