அஸ்வஸ்ம இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கை ஜனவரியில் ஆரம்பம்

அஸ்வசும இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கை அகில இலங்கை ரீதியாக ஜனவரியில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்கான பயிற்சி கருத்தரங்குகள் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் இடம்பெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக காரைதீவு பிரதேச செயலாளர் க.அருணன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் காரைதீவு உதவி பிரதேச செயலாளர் செ.பார்த்திபன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் வளவாளர்களாக அம்பாறை மாவட்ட செயலக புள்ளிவிபர அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.முன்சீப், காரைதீவு பிரதேச செயலக புள்ளிவிபர அபிவிருத்தி உத்தியோகத்தர் சிராஜ் முனீர் ஆகியோர் பங்கு பற்றி விளக்கம் கொடுத்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் அஹமட் அஸ்ரி, காரைதீவு பிரதேச செயலக நலன்புரி நன்மைகள் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் யு.சுபராஜ், அபிவிருத்தி உத்தியோகத்தர் கி. ஜெயந்தகுமாரி மற்றும் இம்முறை பிரதேச எண்ணீட்டு நடவடிக்கையில் ஈடுபடும் கிராம உத்தியோகத்தர்களும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்