இலங்கை நிருவாக சேவையின் மூத்த அதிகாரியான திருமதி வளர்மதி ரவீந்திரன் கிழக்கு மாகாண காணி ஆணையாளராக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவினால் நியமிக்கப்பட்டு (01) கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவரின் சேவைத்தரம், தகுதி மற்றும் அனுபவம் என்பவற்றின் அடிப்படையிலும் தலைமைத்துவ வழிகாட்டுதல்கள், நிர்வாக மற்றும் முகாமைத்துவ செயற்பாட்டு திறமைகள் என்பவற்றை கருத்திற்கொண்டே இந்நியமனம் வழங்கப்பட்டது.