கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் நிலவுகின்ற குறைபாடுகள் மற்றும் செயற்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (02) திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையடலில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இஷ்டம்.ஏ.எம்.பைஷல், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, ஆளுநரின் செயலாளர், உதவி உள்ளூராட்சி ஆணையாளர்கள், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட மாநகர சபை, நகரசபை, பிரதேச சபை ஆகியவற்றின் ஆணையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலில், உள்ளூராட்சி மன்றங்களின் பற்றாக்குறை வருவாய் திட்டம், சிறு திட்டங்கள் மூலம் புதிய வருமானம் ஈட்டுதல், கழிவு முகாமைத்துவம், வாகன பராமரிப்பு, நிலம் தொடர்பான பிரச்சனைகள், நிலையான வைப்புச் சிக்கல்கள், சோலார் பொருத்துதல் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஆளுநரினால் எடுத்துரைக்கப்பட்டது.