(எருவில் துசி) 2025ம் ஆண்டிற்கான கடமையினை ஆரம்பிக்கும் முகமாக அரச அலுவலகங்களில் அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு இன்றைய (01)தினம் அனைத்து அலுவலகங்களிலும் நடைபெற்றது.
புதிய அரசின் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைவாக இன்றைய தினம் 2025ம் ஆண்டை மக்கள் நலன் சார்ந்து செயற்படுத்தும் வகையில் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு நாடு பூராகவும் நடைபெற்ற நிலையில் ம.தெ.எருவில் பற்று பிரதேச சபையிலும் செயலாளர் சா.அறிவழகன் அவர்களின் தலைமையில் சத்தியப்பிரமாணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.