2025 ஆம் ஆண்டின் ஆரம்ப நிகழ்வு வைபவ ரீதியாக இன்று மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில் ஆரம்பம்

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில் 2025 ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று காலையில் வைபவ ரீதியாக ஆரம்ப நிகழ்வுகளுடன் கடமைகளை ஆரம்பித்தனர்.

பிரதேச செயலாளர் சி.சுதாகர் தலைமையில் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வு பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக இடம்பெற்றது.

தேசிய கீதம் இசைக்கப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்ட பின்னர் உத்தியோகத்தர்கள் இந்த ஆண்டுக்கான கடமையினை பொறுப்பெடுக்க உறுதியுரை பூண்டனர்.

தொடர்ந்து நாட்டின் தேசிய நிகழ்வு நேரடி ஒளிபரப்பினை காட்சிப்படுத்தியவாறு பிரதேச செயலாளரின் உரையினை தொடர்ந்து உத்தியோகத்தர்கள் சிற்றூண்டி பரிமாறி உண்டு மகிழ்ந்தனர்.