மட்டக்களப்பு முன்னாள் அபிவிருத்திக் குழுத் தலைவரின் மாபெரும் காணி மற்றும் வாவி ஊழலுக்கு எதிரான நடவடிக்கை..!

நேற்றைய தினம் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மட்டக்களப்பின் முன்னாள் அபிவிருத்திக் குழுத் தலைவரின் மாபெரும் காணி ஊழலுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என என்னால் வலியுறுத்தப்பட்டது. இவ் காணி ஊழலில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசம், புளுட்டுமான் ஓடை, மற்றும் வாகரையில் உள்ள பல பிரதேசங்கள் உட்பட மட்டக்களப்பு வாவியும் உள்ளடங்கியுள்ளது. பல மீனவர்களின் வாழ்வாதரத்துடன் நேரடித் தொடர்புள்ள மட்டக்களப்பு வாவியின் பாரிய பரப்பானது சோலார் நிறுவனம் ஒன்றுக்கு வளங்கப்படிருப்பதும் தெரியவந்துள்ளது. இதற்கான நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ் கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் ஒருங்கிணைப்பில் குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் அருண் கேமச்சந்திர தலைமையில்நடைபெற்றது இதில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜெயந்தலால் ரத்னசேகர, மற்றும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட திணைக்களத் தலைவர்கள் மற்றும் முப்படைகளின் உயர் அதிகாரிகள், உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.