திருகோணமலையில் இயங்கி வரும் பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் இலவச கல்விச் சுற்றுலா அறிவு ஒளி மையத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இன்று (29) ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதன் பொழுது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
இந்த நிகழ்வின் பொழுது ரவிகரன் MP மாணவர்களுக்கு கல்வி இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டு தந்த நிர்வாகத்திற்கு பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு மாணவர்களுக்கு ஏதேனும் தேவைகள் இருப்பின் அவற்றை தாம் சிறப்பாக செய்து தருவதாகவும் வடக்கு கிழக்கு தமிழ் மாணவர்கள் கல்வியில் மேண்மையினை அனைத்து விதமான உதவிகளையும் தாம் செய்யத் தயார் என்றும் மாணவர்களிடத்தில் தெரிவித்தார்.
இந்த நிகழ்வினை சிறப்பாக அறிவு ஒளி மையத்தின் நிறுவனர் உதயகுமார் அஜித் குமார் மற்றும் நிர்வாகச் செயலாளர் புகழ் வேந்தன் டிலக்ஷிகா ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்து தந்தனர். மேலும் விவேகானந்தா மீனவர் சங்கம் சார்பில் இளங்கோவன் ஜெயவதணி மற்றும் அண்ணா மீனவர் சங்க சார்பில் நிவாஸ் ஆகியோர் பங்கு கொண்டனர்.