மறைந்த சினிமா நடிகர் பத்ம பூஷன் விஜய் காந்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி விசேட நினைவு நிகழ்வு மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் இன்று மாலை நடைபெற்றது.
அக்னி இசைக்குழு, சமூக சேவை மற்றும் விளையாட்டு மன்றத்தின் தலைவர் ரகுபரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மதகுருக்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மறைந்த சினிமா நடிகர் விஜய்காந்தின் சிறப்பு பற்றி பலர் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.
அத்துடன் ஏழைக்குடும்பங்களுக்கு பெறுமதியான பொருட்களையும் உள்ளடக்கிய உலருணவுப்பொதிகள் கையளிக்கப்பட்டன.
அரிசி, சீனி, பால் மா, உருளைக்கிழங்கு, சோயா இறைச்சி போன்ற பொருட்கள் இப்பொதிகளில் அடங்கியிருந்தன.