மகிந்தவின் மகனும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்

கதிர்காமம் பிரதேசத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியொன்றின் உரிமையை கையகப்படுத்தியமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான நெவில் வன்னியாராச்சி நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

யோஷித ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.