பொத்துவில் மக்களை சந்தித்த தாஹிர் எம்.பி

கடந்த பொதுத்தேர்தல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் தனக்கும் வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்து அம்மக்களின் தேவைகளை பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் கேட்டறிந்து கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொத்துவில் மத்திய குழுவின் தலைவரும் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியுமான வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயளாலர் எஸ்.முஹம்மட் அலி ஜின்னா, பொத்துவில் பாராளுமன்ற வேட்பாளரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான என்.எச்.முனாஸ், முன்னாள் பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எம்.எம்.தாஜுதீன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொத்துவில் இளைஞர் அமைப்பாளரும் சிரேஷ்ட உறுப்பினருமான ஹாலித் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.