வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை திருக்கோனேஸ்வரப் பெருமானுடைய ஆலயத்திற்கு இந்தியா, தமிழ்நாடு, தருமபுர ஆதீன 27ஆவது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று வெள்ளிக்கிழமை (27)விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்டு பெருமானினை தரிசித்ததுடன் பக்த அடியார்களுக்கு அருளாசி வழங்கினார்.