திருகோணமலை கடற்பரப்பில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் ஒன்று மீனவர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் திருகோணமலையில் இருந்து முப்பத்தாறு கிலோமீற்றர் தொலைவில் கடலில் காணப்பட்டதாக சம்பந்தப்பட்ட மீனவர் கூறுகிறார்.
மேலதிக சோதனைகளுக்காக விமானம் திருகோணமலை விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த விமானம் விமானப்படை பயிற்சியின் போது விமானங்களை தாக்க பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானம் என தெரிவிக்கப்படுகின்றது.