பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியின்படி தேசிய பாதகாப்பு தினத்தினை முன்னிட்டு 2024 டிசம்பர் 26 ஆம் திகதி அன்று சுனாமியின் உயிர்நீத்த மக்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துவதற்கான நிகழ்வு எற்பாடு செய்யப்பட்டு ஏற்படக்கூடிய அனர்த்த நடவடிக்கையின்போது ‘மீட்சித்திறன் உள்ள எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நாளைய சமூகத்தினரை வலுப்படுத்தல்’ என்ற கருப்பொருளுடன் இத்தேசிய பாதுகாப்பு தினம் சர்வ மத தலைவர்களின் பங்குபற்றுதலுடன் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க
தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு வியாழக்கிழமை (26.12) மன்னார் மாவட்ட செயலகம்இ பிரதேச செயலகங்களிலும் அரச அலுவலகங்களிலும் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட தேசிய பாதுகாப்பு தின பிரதான நிகழ்வு மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை காலை மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் முதல் நிகழ்வாக ஈகைச் சுடர் ஏற்றி உயிரிழந்த உறவுகளுக்காக ஆத்ம சாந்தி வேண்டி 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
பின்னர் பௌத்தஇ இந்துஇ இஸ்லாமியஇ கிறிஸ்தவ மத தலைவர்களின் ஆத்ம சாந்தி நினைவு உரைகளும்இ அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப்பணிப்பாளரது விளக்கவுரையும் நடைபெற்றன. சிறப்புரையினை அரசாங்க அதிபர் நிகழ்த்தினார்.
இதன் போதுஇ தேசிய பாதுகாப்பு தினத்தின் முக்கியத்துவம்இ சுனாமி பேரலையின் தாக்கம்இ அவ்வேளையிலான பாதுகாப்புஇ முன்னேற்பாடுகள்இ மக்களிடம் ஏற்பட வேண்டிய அனர்த்தகால விழிப்புணர்வுகள் குறித்துக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அத்துடன்இ சுனாமி அழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் கடந்து விட்டநிலையில் அவ் அனர்த்தில் இலங்கையில் பலியான 35ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறவுகளின் ஆத்ம சாந்திக்கு அனைவரும் பிரார்த்திக்கும் படியும் கேட்டுக் கொண்டார்.
இன்றைய தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில்இ உதவி மாவட்ட செயலாளர்இ மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்இ பதவிநிலை உத்தியோகத்தர்கள்இ மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்இ மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலுவலகத்தின் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.