மட்டு மாவட்ட சாரணர் தலைவராக ஆசிரியரும் கலைஞருமாகிய முத்துலிங்கம் நமசிவாயம் தெரிவு

மட்டக்களப்பு மாவட்ட சாரணர்  தலைவராக  மட்/மமே/ முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் திரு மு. நமசிவாயம் அவர்கள் தெரிவாகியுள்ளார்.

மட்டக்களப்பு முனைக்காட்டினைச் சேர்ந்த இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்விமாணிப்பட்டத்தினை கடந்த 2010 இல் பூர்த்தி செய்து பட்டிப்பளை பிரதேசத்தின் செயலகத்தின் திட்டமிடல் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக இணைந்து சுமார் ஏழு வருடங்கள் சேவையாற்றிய இவர் 2019ஆம் ஆண்டில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையிலிருந்து விலகி  ஆசிரியர் தொழிலில் இணைந்து கொண்டார்.தனது கல்வித்தகைமையினை மேம்படுத்தும் நோக்கில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2023இல் கல்வி முதுமாணிப்பட்டத்தினை பூர்த்தி செய்தார்.

இன்றைய காலகட்டத்தில் இந்துக்கள் மத்தியில் மருவி வருகின்ற
கிராமியக்கலையின் மேம்பாட்பாட்டுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த இவர் பத்துக் மேற்பட்ட கூத்துக்கள் மற்றும் ஏழு கரகங்களை அரங்கேற்றியது மாத்திரமல்லாது பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக போற்றப்படுகின்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் மற்றும் புல்லுமலை நாககன்னி அம்மன் ஆலயம் ,முனைக்காடு ஆலய இறைவனின் புகழ் பாடும் பாடலை வடிவமைத்தது மட்டுமல்லாதுஇசையமைத்து இறுவட்டினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.