இன்று நத்தார் தினம்!

களிலும் நத்தார் தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது.

கிறிஸ்துவின் பிறப்பும் வாழ்வும் அவரது போதனைகளும் மனித வாழ்வின் மீட்பிற்கும், மனமாற்றத்திற்கும், எழுச்சிக்கும் வித்திட்டுள்ளன. மனிதன் மனிதனாக வாழ்வதற்கு கிறிஸ்துவின் போதனைகள் வழி வகுத்துள்ளன. இந்த வகையில் ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக அவை அமைந்துள்ளன.

இதேவேளை, இம்முறை இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லஹேமில் நகரில் இந்த ஆண்டு தந்தார் பண்டிகை கொண்டாட்டம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அநீதிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டாட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பெத்லஹேம் மேயர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான பெத்லஹேம் நகரம் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.