இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் குறித்து ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (EDB) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நவம்பர் 2024க்கான மொத்த ஏற்றுமதிகள், சரக்குகள் மற்றும் சேவைகள் இரண்டையும் சேர்த்து,1,269.33 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 0.04% சிறிய அதிகரிப்பை காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகளின்படி, 2024 நவம்பரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 943.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

இது நவம்பர் 2023 உடன் ஒப்பிடும்போது 5.6% சரிவை பிரதிபலிக்கின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், நவம்பர் 2024 மாதத்திற்கான சேவைகள் ஏற்றுமதிகள் 326.23 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது 2023 ஆம் ஆண்டின் தொடர்புடைய காலத்தை விட 20.89% அதிகரிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.