கொழும்பு அறநெறி பாடசாலையின் தேசிய ஆக்கத்திறன் விருது விழா

புத்தசாசன மத மற்றும் கலாச்சார அமைச்சும் இந்து கலாச்சார திணைக்களமும் இணைந்து 2023ம் ஆண்டுக்கான அறநெறி பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது விழா கொழும்பு இராமகிருஷ்ண மிஷனில் அமைச்சர் ஹினிதுமசுனில் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் மங்கால விளக்கேற்றுவதையும் முன்னாள் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசர், கலாநிதி ராமசந்திர குருக்கள் பாபுசர்மா, சின்மயா மிஷன் சுவாமிகள் பரிசில்கள் வழங்குவதையும் மற்றும் பணிப்பாளர் யது குலசிங்க அனிருத்தன் , மயூராபதி சுந்தரலிங்கம், அகில இலங்கை இந்து மாமன்ற செயலாளர் கந்தசாமி ஆகியோரையும் படத்தில் காணலாம்.