எருவில் கிராமத்தில் சாணக்கியனுக்கு வரவேற்பு.

(எருவில் துசி) எருவில் கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு அமோக வரவேற்பு நிகழ்வு அ.வசீகரன் அவர்களின் தலைமையில் (22) ஞாயிறு மாலை 03.30 மணிக்கு நடைபெற்றது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று தமிழ் அரசு கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை வரவேற்கும் முகமாகவும் வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வாக்களித்த மக்களுக்கு நன்றியினை தெரிவித்ததுடன் இன்றைய நிகழ்வு உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பிரச்சாரத்திற்கான ஆரம்பாமாக கொள்ள முடியும் எனவும், எருவில் வட்டாரத்தின் வெற்றி வேட்பாளர் திரு அ.வசீகரன் ஆரம்ப பிரச்சார கூட்டமாகவும் கருதலாம் எனவும் கருத்துரைத்தார்

இந் நிகழ்வில் கண்ணகியம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் மா.சுந்தரலிங்கம் மற்றும் முன்னாள் திடீர் மரண விசாரணை அதிகாரி சா.பேரின்பநாயகம், கோடைமேடு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் க.விஜயசுந்தரம் மேலும் கழகங்கள் பொது அமைப்புக்கள் ஆலய பரிபாலன சபைகளின் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.