வீதி தாழிறங்கியதால் வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று (21) இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராமத்தில் அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக நீரினால் வீதியில் சிறிய பாலமொன்றின் கீழ்ப்பகுதியிலிருந்த பகுதி அடித்து செல்லப்பட்டிருந்தது.
குறித்த வீதியால் பால் சேகரிப்பிற்காக வாகனம் சென்ற போது சிறிய பாலம் உடைந்து இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.