மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இலவச கண்புரை அறுவை சிகிச்சை திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதன்மூலம் குறித்த நோயாளிகள் பலனடைந்துள்ளமையுடன், எதிர்வரும் சித்திரை மாதம் 300பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சையை மேற்கொள்ளவுள்ளதாக அபயம் அறக்கட்டளை அமைப்பினர் இதன்போது தெரிவித்தனர்.
இம்மனிதாபிமான சேவையின் போது அபயம் அமைப்பின் அங்கத்தவர்கள், போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.