அரச அலுவலர்களிடம் அதுவும் புதிதாக பதவியேற்ற நிர்வாக அலுவலர்கள் சிலரிடம் மக்களை பழிவாங்கும் அலைக்கழிக்கும் சிந்தனை இருப்பதை நான் அவதானிக்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்வாறு தெரிவித்தார்.
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஏற்பாடு செய்த மாகாண பண்பாட்டுப் பெருவிழா செவ்வாய்க்கிழமை (17) காலை 8.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவிக்கையில்
2011ஆம் ஆண்டு நான் இங்கு அரசாங்க அதிபராக கடமையாற்றிபோது இங்கு பண்பாட்டு விழா நடைபெற்றது. இப்பொழுது இந்த மன்னார் மாவட்டத்தில் நடைபெறும் வட மாகாண பண்பாட்டு விழாவில் நான் கலந்து கொள்வதில் மகிழச்சி அடைகின்றேன்.
இந்த மாவட்டத்தில் நான் வேலை செய்தபோது எனக்கு இங்கு கிடைத்த ஒத்துழைப்பையிட்டு நான் பெருமிதம் கொள்ளுகின்றேன். அவ்வளவுக்கு இங்குள்ளவர்கள் மிகவும் ஒத்துழைப்புடன் செயற்பட்டார்கள்.
எம்மத்தியில் பண்பாட்டை நாம் தொடர்ச்சியாக பேணி பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு விருந்தோம்பலும் வளர்க்கப்பட வேண்டும். இவ்வாறான விழாக்கல் மூலம் இவைகள் நினைவூட்டப்பட்டு வருகின்றது.
இன்றைய இங்குள்ள கண்காட்சிகள் மிகவும் சிறப்பாக காணப்பட்டது. எதிர்காலத்திலும் இவைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
சிறுவர்கள் தொடக்கம் நாம் நல்ல பண்பாடுகளை வளர்த்தெடுக்க வேண்டும். இவ்வாறு சுற்று சூழலையும் நாம் பாதுகாக்க வேண்டும்.
மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லாதவாறு நாம் எமது சுற்றுச் சூழலை பேணி பாதுகாக்கப்பட வேண்டும். நாம் நன்றாக படித்திருந்தாலும் எம்மிடம் இந்த பண்புகள் இல்லாது காணப்படுகின்றது.
நாம் எப்படி படித்தவர்களாக இருந்தாலும் எம்மிடம் நல்ல பண்புகள் இல்லாவிட்டால் எம்மை யாரும் மதிக்க மாட்டார்கள்.
எனக்குள்ள கவலை என்னவென்றால் அரச அலுவலர்களிடம் அதுவும் புதிதாக பதவியேற்ற நிர்வாக அலுவலர்கள் சிலரிடம் மக்களை பழிவாங்கும் அலைக்கழிக்கும் சிந்தனை இருப்பதை நான் அவதானிக்கின்றேன்.
இந்த எண்ணங்களை மாற்றுங்கள். போரால் பாதிக்கப்பட்ட எங்கள் மக்களைஇ எங்கள் மாகாணத்தை நாங்கள் எல்லோரும் இணைந்துதான் உயர்த்தவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். .
இந்த நிகழ்வில்இ பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தனது உரையில்இ மேலும் தெரிவிக்கiயில்
தமிழர்களின் மிக முக்கியமான பண்பாடு விருந்தோம்பல். அதை நாம் இன்று மறந்து செல்கின்றோம். அவ்வாறு நாங்கள் மறந்து செல்பவற்றை நினைவூட்டத்தான் இவ்வாறான விழாக்கள் நடத்தப்படுகின்றன என்று குறிப்பிட்டார்.
அத்துடன் இந்தப் பண்பாட்டு பெருவிழாவுடன் இணைந்ததாக நடத்தப்பட்ட கண்காட்சியை வெகுவாகப் பாராட்டிய ஆளுநர்இ அந்த ஆக்கங்களை இளையோரே செய்திருப்பதாகவும் அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
எமது சுற்றாடலை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில் சிறுவயதிலிருந்தே பழக்கவேண்டியிருப்பதாகவும் அதற்காக ஒரு பாடவேளையை ஒதுக்குவது தொடர்பில் அமைச்சின் செயலருடன் கலந்துரையாடவிருப்பதாகவும் குறிப்பிட்ட ஆளுநர்இ வீதிகளில் குப்பைகளை வீசி எமது மாகாணத்தை அசிங்கமாக்குவதில் அநேகர் படித்தவர்கள்தான் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும்இ மாவட்டச் செயலராக கடந்த காலத்தில் தான் இருந்தபோது கூட இவ்வாறு பொதுமக்கள் சந்திப்பதற்கு வரவில்லை என்றும் சின்ன விடயங்களுக்கும் இப்போது ஆளுநர் அலுவலகத்துக்கு வருகின்றார்கள் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
அந்தப் பொதுமக்கள் தங்களது பிரதேசங்களிலுள்ள அரச திணைக்களங்களில் அந்தச் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்று வருவதாகச் சுட்டிக்காட்டிய ஆளுநர்இ பொதுமக்கள் தினமான நேற்று திங்கட்கிழமை (16.12.2024) இரவு 8 மணியைத் தாண்டியும் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொடுத்திருந்தேன் எனவும் தெரிவித்தார்.
முன்னைய காலத்தில் குறைந்தளவு பணியாளர்களுடன் மக்களுக்கு திறம்பட சேவைகள் வழங்கப்பட்டதாகவும் இப்போது அதிகரித்த ஆளணி மற்றும் கணினி வளங்கள் இருந்தாலும் மக்களுக்கு சிறப்பான சேவைகள் வழங்கப்படவில்லை என்று ஆளுநர் வருத்தத்தை வெளியிட்டார்.
மக்கள் தமது பிரதேச அல்லது கீழ்நிலை அலுவலர்களின் ஊடாக ஒரு சேவையைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என மேல்நிலை அலுவலர்கள் அல்லது திணைக்களத் தலைவர்களிடம் சென்றால்இ அந்த மக்களுடன் எரிந்து விழுந்து அவ்வாறு ஏன் சென்றீர்கள் எனக் கேட்டுஇ அந்தச் தேவையை நிறைவேற்றிக்கொடுக்க மறுக்கின்ற கீழ்நிலை அலுவலர்கள் இப்போது இருக்கின்றார்கள் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர்இ இவர்களால் எப்படி இப்படிச் சொல்ல முடிகின்றது என்ற கேள்வியை எழுப்பியதுடன் இவர்களின் மனநிலையை நினைத்து கவலையடைவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன்இ கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன்இ மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன்இ நாட்டுக்கூத்து கலைஞர் கலாபூஷணம் செ.மாசிலாமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இளங்கலைஞர் விருதை 10 பேரும்இ கலைக்குரிசில் விருதை 13 பேரும்இ சிறந்த நூல்களுக்கான விருதை 14 பேரும் பெற்றுக்கொண்டனர்.
(வாஸ் கூஞ்ஞ)