ஐந்து வருடங்களுக்கு பின் மன்னார் மறை மாவட்டத்தில் மறைக்கல்வி பரீட்சை

மன்னார் , வவுனியா மாவட்டங்களின் நிர்வாகத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ள மன்னார் மறைமாவட்டத்தில் மாணவர்களுக்கான வருடாந்த மறைக்கல்வி பரீட்சை ஐந்து வருடங்களின் பின் இவ்வருடம் நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலையத்தினால் வருடந்தோறும் மன்னார் மற்றும் வவுனியா நிர்வாக மாவட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ள மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை (15) காலை 10 மணி தொடக்கம் பிற்பகல் ஒரு மணி வரை மன்னார் மறைமாவட்டத்திலுள்ள ஐம்பது பங்குகளிலும் இப்பரீட்சை இடம்பெற்றுள்ளது

மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி நடு நிலையத்தின் இயக்குனர் அருட்பணி அந்தோனி மரியதாசன் குரூஸ் (றொக்சன்) அடிகளாரின் தலைமையில் இப் பரீட்சை இடம்பெற்றது

இப்பரீட்சையானது கடந்த காலங்களில் வருடந்தோறும் வருட இறுதியில் நடைபெற்று வந்தபோதும் கொரோனா தொற்று நோய் , காகிதாள் தட்டுப்பாடு போன்ற சூழ்நிலை காரணமாக 2019 ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த ஐந்து வருடங்கள் இப்பரீட்சை நடைபெறாது இருந்து வந்த நிலையிலேயே இப்பரீட்சை இவ்நடப்பு வருடத்தில் இப்பரீட்சை இடம்பெற்றுள்ளது.

மன்னார் மறைமாவட்டத்தில் 1139 மறைவாழ்வு பணியாளர்களால் (மறையாசிரியர்கள்) கற்பிக்கப்பட்ட 13187 மாணவர்கள் இப்பரீட்சையில் தோற்றியுள்ளனர் என மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி நடு நிலையத்தின் இயக்குனர் அருட்பணி அந்தோனி மரியதாசன் குரூஸ் (றொக்சன்) அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

(வாஸ் கூஞ்ஞ)