நளீர் பௌன்டேசன் அமைப்பின் அனுசரனையில்புதிய சீருடை அறிமுக நிகழ்வு..

மத்திய முகாம் யுனைடெட் பிரண்ஸ் கழகத்தின் வேண்டுகோளிற்கிணங்க நளீர் பௌன்டேசன் அமைப்பின் அனுசரனையில் புதிய சீறுடை அறிமுகம் செய்து வழங்கி வைக்கும் நிகழ்வு அமைப்பின் காரியாலயத்தில் (14) இடம்பெற்றது.

அமைப்பின் ஸ்தாபக தலைவர் எம்.ஏ. நளீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்களான ஜஹான் மற்றும் யோகநாதன் மற்றும் மத்திய முகாம் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி றிபாஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வில் அமைப்பின் தலைவர் உரையாற்றும் போது..

எமது அமைப்பானது பல்வேறு பட்ட சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை சகித்துக் கொள்ள முடியாத சிலர் இதற்கெதிராக பல்வேறு சதித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் எமது பணிகளை கைவிடாமல் தொடர்ந்தம் முன்கொண்டு செல்வோம். இதற்காக உங்களைப் போன்ற இளைஞர்களின் பங்களிப்பு மிகமிக அவசியம் என தெரிவித்தார்.

இதன் பின்னர் விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைப்பின் செயற்பாட்டாளர்கள், கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.