தெரிவு செய்யப்பட்ட புதிய மன்னார் ஆயருக்கு மிக் விரைவில் ஆயருக்கான திருப்பொழிவு

மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் தெரிவை தொடர்ந்து இவர் மூன்று மாதங்களுக்குள் ஆயராக திருப்பொழிவு செய்யப்பட வேண்டிய நியதி இருப்பதால் தபசு காலத்திற்கு முன் புதிய ஆயர் ஆயராக திருப்பொழிவு செய்யப்படுவார் என ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்

மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் தெரிவு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை சனிக்கிழமை (14) ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்

டிசம்பர் மாதம் 14 ம் திகதி உரோமாபுரியிலிருந்து திருத்தந்தையிடமிருந்து கடிதம் கிடைத்தது

அதில் உரோமாபுரியில் இன்றைய தினம் (14) மதியம் 12 மணிக்கு எமது திருத்தந்தை அவர்கள் மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயரை நியமனம் செய்வார் என்று கூறப்பட்டது

இதன்படி எமது இலங்கை நாட்டின் நேரப்படி சரியாக மாலை 4.30 மணிக்கு திருத்தந்தை அவர்களால் எமக்கு அனுப்பப்பட்ட மடலை வாசித்தேன்

திருத்தந்தையின் இலங்கை பிரதிநிதி அதிமேதகு பேராயர் பிரைன் குட்வாகே ஆண்டகை அவர்கள் தனக்கு அனுப்பிய செய்தியின் படியே திருத்தந்தை எமக்கு அனுப்பப்பட்ட மடலை குறிப்பிட்ட இத்தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் மன்னார் மறைமாவட்ட பேராலயத்தில் யாவருக்கும் வாசித்து காட்டப்பட்டது

ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை அடிகளாரை புதிய ஆயராக மன்னார் மறைமாட்டத்திற்கு நியமித்துள்ளார் கள்

வழமையாக திருச்சபையின் சட்டத்தின்படி புதிய ஆயரின் நியமனம் வெளிப்படுத்தப்பட்ட பின் மூன்று மாதங்களுக்குள் அவர் ஆயராக திருப்பொழிவு செய்யப்பட்டு மறைமாவட்டத்தை பொறுப்பேற்க வேண்டும்

ஆகவே ஆயரும் அவரின் ஆலோசகர்களும் இதற்கான ஒழுங்குமுறைகளை செய்வார்கள்

முன்று மாதங்கள் என்கிறபோது பெப்ரவரி 14 ந் திகதிக்கு (14.02.2025) முன்பு இவருக்கு ஆயருக்கான அருட் பொழிவு வழங்கப்பட வேண்டும்

விபூதி தினத்துடன் தவசு காலம் தொடங்குகின்ற படியால் இதற்கு முன்பே இவரின் ஆயருக்கான திருப்பொழிவை வழங்க கடமைப்பட்டுள்ளோம்.

ஆகவே இது தொடர்பாக நாங்கள் ஒன்றுகூடி இதற்கான ஆய்த்தங்களை முன்னெடுக்க இருக்கின்றோம் என ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இவ்வாறு புதிய ஆயரின் தெரிவுக்குப் பின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்

(வாஸ் கூஞ்ஞ)